
மௌன மலர்களே
மலர்களே மலர்களே
பலவண்ணம் உடைய புதுப்பொலிவுப் புஸ்ப்பங்களே
குறுகிய வாழ்க்கையில்
கோலாகலம் கொண்டவரே
இரவில் மலரும் மல்லிகையே
பகலில் மலர மாட்டாயா-ஏன்
ஆடவர்களை கண்டு அச்சமா
அல்லது நாணத்தின் உச்சமா
கணவனுக்காக காத்திருக்கும் சூரியகாந்தியே
கர்ப்புக்கு இலக்கணம் நீதானோ
அனைவரையும் கவரும் ஆனந்ந ரோஜாவே-உன்
அந்தரங்கத்தை காப்பதற்காகவா
நீ போட்டது முள்.
தேனை நுகர வரும் தேனியை
எப்படி நீ கவர்ந்தாய்
உன் சிரிப்பிலா
உன் சினேகத்திலா
அல்லது மௌனத்திலா
மாருதத்தில் கலந்து மணம் வீசும் மலர்களே
என்னவொரு தனித்தன்மை உங்கள் இதழ்களில்
நீங்கள் கறுப்பாக பிறக்காத காரணத்தை கண்டுகொண்டேன்
சோகத்திலும் சிரிக்கிறீர்களே
இன்பத்தை அள்ளி தெளிக்கிறீர்களே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக